Lavanya Selvaraj's Blog

உயிரே உன்னை நினைத்து…

Posted on: June 19, 2011

 

சந்திரரே,
எனக்கென தேய்வதால்
நீயும் வெண்ணிலவே…
நீ
முகம் காட்ட மறுக்கும் நாளெல்லாம்
முழுமை அடையவில்லை என் நாட்கள்…

 

தூயவரே,
இரவில் இமை மூடி விழித்திருக்கிறேன்
நீ என் தலை வருடும் சுகம் உணர…

 

தோழரே,
வழியில் மட்டுமின்றி
வாழ்விலும் கண் மூடி நடக்கிறேன்
உன் கரம் பற்றிய துணிவில்…

 

பிரிவென்னும் வலி பொறுக்கா
கோழை நான்
புது உறவுகள் பல காட்டி நீ பிரிந்தால்
பிரிவது என் உடல் மட்டுமே…

 

என்றும் என் பெயர் பின்
உன் பெயர் சேரும் வரம் வேண்டும்
தருவாயா???

 

செல்வரே,
எனக்கென நிழலிலும் குடை பிடிக்கிறாய்
என் புன்னகையே உன் வாழ்வின் லட்சியம் என்கிறாய்
உதடுகள் பேசாமல் என் உள்ளம் அறிகின்றாய்

 

இளைஞரே,
எனக்கென இமயத்தையும் கொண்டு வருகிறாய்
நான் கேட்கும் வரம் தர மறுப்பது ஏனோ???

 

நீர் ஆசையும் நிறைவேறக்கூடும்
உன் அன்பை தோற்கடிக்கும்
அன்பர் இவ்வுலகில் உண்டெனில்…
உயிரே அதுவரை காத்திரு

 

அன்பென்னும் செல்வத்தின் ராஜனே,
பரிசுகள் பல நீ   தரினும்
கிடைத்தற்கரிய பரிசு உன் மனைவி மட்டுமே… 🙂

 

என் உயிரே,
உன்னை நினைத்து வாழும் ஒவ்வொரு நாளும்
எனக்கு தந்தையர் தினமே…

 

– என்றென்றும்
லாவண்யா செல்வராஜ்  🙂

 

Dedicated to all the Fathers in the world………..

HAPPY FATHER’S DAY

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

KEEP ON TRYING.....

All Date is always ripe to do Good

June 2011
M T W T F S S
« May   Jul »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Blog Stats

  • 37,958 hits

Twitter Tweets

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Top Rated

Top Clicks

  • None
%d bloggers like this: